இனவரைவியல் சிறுகதைகள்

இனவரைவியல் சிறுகதைகள் நா. இராமச்சந்திரன் ‘Ethnography’ என்ற ஆங்கிலச் சொல்லுக்கு இணையாகத் தமிழில் ‘இனவரைவியல்’ என்ற பதத்தை மானிடவியலர்களும் நாட்டார் வழக்காற்றியலரும் பயன்படுத்துகின்றனர். ‘இனவிளக்கவியல்’ என்று அவர்களுள் ஒருசிலர் தொடக்கத்தில் குறிப்பிட்டனர். பக்தவத்சல பாரதி ‘பண்பாட்டு மானிடவியல்’ (1990) என்ற தமது நூலில் ‘இனக்குழுவியல்’ என்ற பதத்தைக் கையாண்டுள்ளார். ஆனால், அவர் தாம் எழுதிய ‘மானிடவியல் கோட்பாடுகள்’ (2005) என்ற நூலில் ‘இனவரைவியல்’ என்ற சொல்லையே பயன்படுத்தியுள்ளார். தற்பொழுது இனைவரைவியல் என்ற சொல் பொதுவாக எல்லாராலும் ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளது.