அம்மைக்கொரு தாலாட்டு
என்னை உறக்குவதற்கு நீ ஒருகாலத்தில் பாடிய கண்ணீர் பாட்டையும் கடன்பெறுகிறேன் நான். இன்று நான் தாலாட்டுப் பாடுகிறேன்;ளூ உறங்கு என் தாயே, இனி அல்லலில்லை, முக்தையாகிவிட்டாய்! பிறவி கடன், குருதிப்பால் கடன், நாவில் நின் விரல் பொன்தேனைத் தடவிய கணத்தில் பூத்த சங்கீதமும் அம்மா என்ற சொல்முதல் மின்னித் தெளிந்த படிமங்களும் கடன். மீளாக் கடனுக்குக் கணக்கு வைக்காமல் கவனித்தாய் என்னைநீ அந்திம நாள்வரை. ஏதும் பதிலுக்குத் தர இயலவில்லை உன் தங்கமகன் பாடி நடந்தான் சஞ்சாரியாய்….