மரத்தின் பாடல்

நிலையற்று அலைந்து திரிபவனே,

வந்துவிட்டாயோ மீண்டும் நிழல்தேடி

அபயம் வேண்டி பேராசை உறையும் கண்களால்?

நீண்ட வழியெங்கும் வெப்பம் கொதிக்கின்ற தீக்கனல்

புழுக்கம் வந்து நீ அருகில் வந்துவிட்டாயோ?

சோர்வுற்றுத் தளர்ந்த வழிப்போக்கர்களுக்கு இறுதிக்

கவிதைபோல் சாந்தத்தை நல்கும் இந்த

நிழல்களில் இழைந்துஎன் பாதபதுமங்களில்

தலைசாய்த்து உறங்கியும் உணர்வு

நுழைவாயிலில் இருளை ஊடுருவியும் நடந்த உன் மூதாதையர்கள்.

அவர்கள் உன் நினைவுகளில் பாக்கி நிற்கும்போதும்

அடர்ந்த இலைகள் உதிர்ந்து வரண்ட கிளைகள்

இதயம் பிளந்து, நீர் சொரியும் கண்ணில்

கனிவு சுரந்து, தீய இருண்ட இரவுகளில்

தட்டுத்தடுமாறிச் செல்லும் உன் தலைமுறைக்கு அறிவின்

உறவும் வரண்டு உணங்கும்போது –

அபயம் பெற வந்த யாத்திரீகனே உன்னோடு

சொல்வதற்கு உண்டெனக்குக் கொஞ்சம் புதிர்கள்.

சிறிது செவிகொடுத்துக் கேள். கிரந்தத்தில்

நுரைத்தெழும் என் சோக மந்திரகீதங்களும்

நரம்புகளில் படரும் வாழ்வார்வமும்

சொல்கிறேன் நான், உனக்கு அன்னியமானது என் ஜாதகம்.

கடுமையாம் நோவின் கொள்ளியால் கீறிய

துன்பங்களை ஏற்றுக் குணமாக்க நினைக்கும் நின்

காயத்தின் வாயில் நீற்றுலைஊதி ஆற்றி என்

மூலிகை மருந்திற்காய் நீ ஏக்கம் கொள்ளவே,

அறிவாய் நீ, உன் உடன்பிறப்புகள் இன்று என்

கனிவுத் தன்மையைக் கவர்ந்தெடுத்துவிட்டனர்.

அவர்கள் உருவாக்கிய நச்சுப் புகைமண்டலம் என் சூரியனின்

கண்களை மறைத்ததில் நான் கொல்லப்பட்டேன்!

இருப்பினும் கண்ணேறு பட்டு வாடாமல்

அந்தராத்மாவில் நான் கவனித்துக் காத்து வந்த

நல்ல இளமூங்கிலை இன்று தருவேன்,

உனக்கு நான் செய்யும்

நன்மை இதுமட்டுமே.

இதைக் கொண்டு செல் நீ, உன் வீட்டு முற்றத்தில்

கருணையையும் அன்பையும் உரமாயிட்டுப் போற்று,

இது உன் மண்ணினை நீரொழுக்கில் கரைந்துவிடாமல்

வேர்களால் பிணைத்துக் காக்கும்.

இதில்தான் சூரியனின் அன்புக் கிரணங்களில்

பொலியும் பானைச் சுரக்க வைக்கும் இயற்கை.

இதில்தான் நாளை உன் குலத்திற்கு

வயிறார உண்பதற்குச் சோறு.

இதில்தான் உயிரைக்

காக்கின்ற புனித எழுத்துக்கள்.

இதில்தான் மூச்சுக்கான

சுத்தமான சுவாசக் காற்று.

இதில்தான் நாளை உன்

மண்ணுக்கும் மக்களுக்கும்

பொழிந்திடும் பருவகாலத்தின் கீதமும்

கனிவும் கனவும்

உலக வாழ்க்கையின் வீரியமும்.

இது முளைத்தாடும் காற்றின்

சிறகுகளில் நடனம் புரியட்டும்.

இதில் நாளை நன்மைகள் மகரந்தப்பொடிகளாய்

நிறமுள்ள பூக்களமிடட்டும்.

ஏவுகணைபோல் இனப்பெருக்கம் அதிகரித்து அதிகரித்து முடிவி

வனப்பகுதி அழகு பெருகட்டும்.

அதன் கிளைகளில் அமர்ந்து கிளிக்

குஞ்சு இசைக்கும் அன்பு ராகம்,

உலகின் உண்மையாகும்

ஜீவராகம்.

அது கேட்டு உன் இதயத்தில் அலையாய்ப் பொழியட்டும்

ஒரு சச்சிதானந்த இனிமை.